districts

img

கைவண்டூர் கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க அதிகாரிகள் உறுதி

திருவள்ளூர், பிப் 5- திருவள்ளூர் அருகில் உள்ள கைவண்டூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் சீரமைக்கப்படும் என வட்டாட்சியர் வாக்குறுதி அளித்ததால் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவள்ளூரை அடுத்த கைவண்டூர் ஊராட்சி யில் உள்ள கிராம நிர்வாக  அலுவலகம் கடந்த 5ஆண்டு களாக பழுதடைந்து உள்ளது. இதனால் மழை காலத்தில்  அலுவலகத்தின் உள்ளே மழைநீர் தேங்கு கிறது. இதன் காரணமாக அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளுக்கும், பொது  மக்கள் மற்றும் அதிகாரிக ளுக்கும் உரிய பாதுகாப்பு இல்லாத அவலநிலை உள்ளது . இந்த கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என  வலியுறுத்தி பல முறை அதி காரிகளுக்கு தெரிவித்தும் எந்த பலனுமில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் கட்டடத்தை சீரமைக்க கோரி பிப்ரவரி-8 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது.இந்த சூழலில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைவர்களிடம் பேச்சு நடத்தினர். கிராம நிர்வாக அலுவலகம் அடுத்த 3 மாதத்தில் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததன் பேரில்  போராட்டம் கைவிடப் பட்டது. இந்த பேச்சுவார்த்தை யின் போது வட்ட குழு  உறுப்பினர்கள் டி.ஆனந்தன், சிட்டிபாபு, கிளைச் செய லாளர் வி.மணி, கைவண் டுர் ஊராட்சி மன்றத் தலை வர் எம்.சவுக்கர்பாண்டி ஆகி யோர் கலந்து கொண்டனர்.