திருப்பூர், ஜூலை 20- கொடுமுடி அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதால், குழாய் உடைப்பை சரிசெய்ய அப்பகுதிப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கொடுமுடி அருகே காவிரி ஆற்றிலிருந்து குழாய் அமைத்து குடிநீர் கொண்டு வரப்பட்டு காங்கேயம், ஊதியூர், குண்டடம் ஆகிய பகுதிக ளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கென அமைக்கப் பட்டுள்ள குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாகி வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், ஊதியூர் – குண்டடம் சாலையில் அண்ணா நகர் – தாயம்பாளையம் இடையில் உள்ள ஓடைக்கு அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வெளியேறி அருகில் இருக் கும் ஓடையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால், குண்ட டம் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைத்து குடிநீர் விரயமாகாமல் பொது மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.