திருவள்ளூர், மார்ச் 26- பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவன் ஜெ.மைதில் பொன்னேரியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகனான இவர், தந்தை அளித்த ஊக்கத்தால் நீச்சல் பயின்று வந்தார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற 50 மீட்டர் பிரீஸ்டைல் மற்றும் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் 19 வயது உடையவர்களுக்கான பிரிவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இதனடிப்படையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த மாணவருக்கு ஆசிரியர்களும் சக மாணவர்களும் அப்பகுதி மக்களும் பாராட்டு தெரி வித்து வருகின்றனர்.