திருவள்ளூர், அக். 22 திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், திறந்து வைத்தார். திருவள்ளுர் மாவட்டத்தில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக ரூ.451 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பொது மருத்துவப் பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, அதி தீவிர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு, பிரேத பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மருத்துவ சேவைகளை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலையில் துவக்கி வைத்து பார்வையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதா வது: திருவள்ளுர் வட்ட மருத்துவமனை யாக 1964-ம் ஆண்டில் 40 படுக்கை வசதியுடன் தொடங்கி, 1996-ம் ஆண்டு மாவட்ட தலைமை மருத்துவ மனையாக 220 படுக்கையுடன் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட தொடங்கி, படிப்படியாக 370 படுக்கை யுடன் செயல்பட்டு வந்தது.மருத்து வக்கல்லூரி மருத்துவமனை கல்லூரி வளாகம் 21.48 ஏக்கர் பரப்பளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும், இம்மருத்துவ சேவை கள் துவக்க விழாவில், மருத்துவமனை யில் சிறப்பாக சேவை புரிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்க ளுக்கு அமைச்சர்கள் கேடயங்களை வழங்கி, பாராட்டினர். தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக சமூக பங்களிப்பு நிதி ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இம்மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு வழங்கப்பட்ட அவசர ஊர்தியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.செந்தில் குமார், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்தி ரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்ஷன், திருவள்ளுர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.