திருவள்ளூர், மார்ச் 1- நகர்புற வாழ்வாதார திட்டத்தின் மூலம் பழங்குடி இருளர் இன மக்களின் பொரு ளாதார நிலைகுறித்து மாவட்டஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என மலை வாழ் மக்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் 2016-2017 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகர்புற பகுதிகளில் உள்ள பொருளா தார நிலையில் மிகவும் நலிவடைந்த குடும்பங்களை, பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய செய்திடும் வகையில், நகர்புற வாழ்வாதார இயக்கத்திற்கு ஒன்றிய அரசு 60 விழுக்காடு மற்றும் மாநில அரசு 40 விழுக்காடு நிதி பங்களிப்புடன் செயல் பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் 21வது வார்டில் பெரியார் நகரில்பழங்குடி இருளர் இன மக்கள் 20 குடும்பங்கள் 30 ஆண்டுகளாக வசித்து வரு கின்றனர். இதுவரை அங்கு மகளீர் சுய உதவிக்குழு அமைக்கப்படவில்லை. தீன்தயாள் உபாத்யா திட்டத்தில் இளை ஞர்களுக்கு தொழிற்பயிற்சி கிடைக்க வில்லை, திட்டம் குறித்து அம்மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகர்புறத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கு மகளீர் சுயஉதவிக்குழு அமைத்திடவும் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்கிடவும் தொழில் குழு அமைத் திடவும் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மனு அளித்துள்ளனர். இதில் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, திருத் தணி ஒன்றிய செயலாளர் ஜி.மணிகண்டன், ஒன்றிய தலைவர் விஜியா ஆகியோர் கலந்து கொண்டனர்.