திருவள்ளூர்,டிச.5- மீஞ்சூர் அருகில் உள்ள தத்தை மஞ்சி அரசு நடுநிலைப் பள்ளியில் இருளர் இன மாணவர்களை பள்ளியில் தனியாக அமரவைத்து சொல்லி தரக்குறைவாக பேசிய தலைமை ஆசிரியரை, வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலி யுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகில் உள்ள தத்தைமஞ்சியில் அரசு நடுநிலைப் பள்ளியில் 74 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் இருளர் இன மாணவர்கள் 15 பேர் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு உள்ள பள்ளியில் நவம்பர் 25 அன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்க இருளர் இன மாண வர்கள் முன்கூட்டியே தேர்வு செய்யப் பட்டு அதற்கான பயிற்சியும் அளிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திறமை உள்ளவர்கள் மட்டுமே நிகழ்ச்சி யில் பங்கேற்க முடியும் என்று பலரது முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை உஷாராணி ஏளனமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் சக மாணவர்களுடன் இருக் கையில் அமர விடாமல், தனியாக உட்கார வைப்பது, தீண்டாமையை கடைபிடிக்கும் வகையில், சாதி பெயரை சொல்லி தரக்குறைவாக பேசி வது, அணிந்திருக்கும் ஆடைகள் குறித்தும் கேலிக் கிண்டல் செய்வதை தலைமை ஆசிரியை உஷாராணி வாடி க்கையாக கொண்டுள்ளதாக கூறப்படு கிறது. இதனைக் கேட்டு மன வேதனை யடைந்த இருளர் இன மாணவர்கள் அழுது கொண்டே பள்ளியில் நடந்த வற்றை தங்களது பெற்றோரிடம் கூறியு ள்ளனர். இதனால் கொதிப்படைந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். மேலும் தங்கள் பிள்ளைகளை கடந்த 7 நாட்களாக பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். தலைமை ஆசிரியை உஷாராணி மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பு வோம் என உறுதியாக தெரிவித்துள் ளனர். இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.தமிழ்அரசு, விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் அ.து.கோதண்டன் ஆகியோர் திங்களன்று (டிச. 5) அம்மக்களை சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் உஷா ராணி மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடுடன் நடந்து கொள்வது, இழிவாக பேசுவது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தயங்காமல் பள்ளி யின் தலைமை ஆசிரியை உஷா ராணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.