திருவள்ளூர், ஜூலை 3- தமிழக முதல்வரின் சாலை விரிவாக்கத்திட்டத்தின் கீழ் ரூ. 124 கோடி மதிப்பீட்டில், திருவள்ளூர் கோட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி மாநில நெடுஞ்சாலை, மணவாளநகர் - மேல்நல்லாத்தூர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சிங்கபெருமாள்கோவில் - திருபெரும்புதூர் - திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் மணவாளநர் - மேல்நல்லாத்தூர் வரை உள்ள நெடுஞ்சாலை 57 ல், ரூ. 43 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி துவங்கியது. திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இந்த நெடுஞ்சாலையில் 12 சிறுபாலங்கள் விரிவுப்படுத்தவும் இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை ஜூன் 2023ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.