திருவள்ளூர், மே 22- பழங்குடி இன மக்க ளுக்கு குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திரு வள்ளூர் மாவட்ட 8 வது மாநாடு ஞாயிறன்று (மே 22) தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் மாவட்ட தலை வர் ஜி.சின்னதுரை தலை மையில் நடைபெற்றது.மாவட்ட துணைத் தலை வர் பி.கருணாமூர்த்தி கொடி யோற்றினார்.மாவட்ட குழு உறுப்பினர் வி.அந்தோணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் துவக்கி வைத்து பேசினார்.மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு வேலை அறிக்கையை முன்மொழிந்து பேசினார். பொருளாளர் எஸ்.குமர வேல் வரவு செலவு கணக்கை வாசித்தார். மாநில துணைத் தலை வர் ஏ.வி.சண்முகம், விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சம்பத், மாவட்ட செயலாளர் பி.துளசி நாராயணன், விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன், வேட்டைக்காரன் முன்னேற்ற பழங்குடி சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதரன், மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஏ.பத்மா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு மாநாட்டை நிறைவுசெய்து வைத்து பேசினார். ஒன்றிய அரசின் ஏகலை வன் பள்ளியை திருத்தணி யில் துவக்க வேண்டும், சாதி சான்றிதழ் ஆன்லைன் நடைமுறையை கைவிட்டு, நேரடியாக வழங்க வேண்டும், பழங்குடி இன மகளிர் சுய உதவி குழு விற்கு ரூ.1லட்சம் மானியம் வழங்கி, தொழில் பயிற்சி அளிக்க வேண்டும், பழங்குடி இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கி வீடு கட்ட ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்ட தலைவராக ஜி.சின்னதுரை, மாவட்டச் செயலாளராக ஆர்.தமிழ்அரசு, பொருளாளராக எஸ்.குமரவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.