சமையல் எரிவாயு சிலிண்டர் ஜிஎஸ்டியை குறைக்க கோரிக்கை
திருப்பூர், டிச. 31- வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரியினை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு கூறினார். திருப்பூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்க அலுவ லக திறப்பு விழா பல்லடம் சாலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க மாநில தலைவர் வெங் கிடசுப்பு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகம் முழுவதும் ஹோட்டல் உரிமையாளர்கள் மிகப் பெரும் சிரமத்தை சந் தித்து வருகின்றனர். ஏற்கனவே மின்கட்டண உயர்வு, சொத்து வரி, குப்பை வரி உயர்வின் காரணமாக தொழில் நலிவடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மூலப்பொருட்களின் விலையும் தற்போது அதி கரித்து வருவது பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹோட்டல் உரிமையாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் மத்திய அரசு வீடுகளுக்கு உள்ளது போலவே, வணிக பயன்பாட்டிற் கான சிலிண்டர்களுக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியினை 5 சதவிகித ஜிஎஸ்டி வரியாக குறைக்க வேண்டும். மாநில அரசு மின் கட்டணம் மற்றும் சொத்து வரி ஆகியவற் றில் சலுகை வழங்குவதோடு, ஹோட்டல்களில் சேகரமா கும் குப்பைகளை நகராட்சி மற்றும் மாநகராட்சி மூலமாகவே பெற்று அதனை மறுசுழற்சி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
வாகனங்கள் ஜன. 18ல் ஏலம் திருப்பூர்.31- திருப்பூா் மாநகர காவல் துறையில் கழிவு செய்யப் பட்ட பலதரப்பட்ட 7 காவல் வாகனங்கள், 2 இருசக்கர வாகனங்கள், 5 நான்கு சக் கர வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் ஜன 18ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவ லக வளாகம் அருகில் உள்ள ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வர்கள் முன்பணமாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 1000, நான்கு சக்கர வாகனத் துக்கு ரூ.2000 செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று மாநகர காவல் துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:51.75/60அடி
நீர்வரத்து:799கன அடி
வெளியேற்றம்:798கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 89.70/90அடி.
நீர்வரத்து:463கனஅடி
வெளியேற்றம்:463கன அடி