உடுமலையில் சிறுமிகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய 6 பேரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உடுமலை பகுதியை சேர்ந்த 13 மற்றும் 17 வயது சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் உடுமலை நகரைச் சேர்ந்த ஜெயகாளீஸ்வன், மதன் குமார், பரணிகுமார், பிரகாஷ், நந்தகோபால், பவா பாரதி மற்றும் 14, 15 மற்றும் 16 வயது சிறுவர்கள் ஆகிய மொத்தம் 9 பேர் கீழ் கைது செய்யப்பட்டனர். 3 போ் சிறுவர்கள் என்பதால் கோவையில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும் வழக்கு தொடர்புடைய உடுமலை சத்திரம் வீதியில் உள்ள சிவா தங்கும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. அதன் மேலாளர் சாமுவேல் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் குற்றவாளிகள் ஜெயகாளீஸ்வன் (18), மதன்குமார் (19), பரணிகுமார்(21), யுவபிரகாஷ் (24), நந்தகோபால்(19), பவா பாரதி (22) ஆகிய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் அதன் அடிப்படையில் 6பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.