பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கோபாவேச போராட்டத் தில் ஈடுபட்டனர். ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து பெட் ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தி வருவதைக் கண்டித்து சேலம் ஜங்சன் தலைமை தபால் நிலையம் முன்பு மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.குணசேகரன், ஞானசவுந்தரி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ் ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். மெய்யனூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வடக்கு மாநகர செயலாளர் என்.பிர வீன் குமார் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. முன்னதாக இரண்டு சக்கர வாகனத்தை பாடைகட்டி எடுத்து வந்து ஒப்பாரி வைத்தும், சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஆர்.குழந்தை வேல், எம்.சேதுமாதவன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். கன்னங்குறிச்சி பேருந்து நிலையத் தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் தேவி பழனிச்சாமி தலைமையிலும், ஓமலூரில் தாலுகா செயலாளர் ஈஸ்வரன் தலைமை யிலும், மேட்டூர் பேருந்து நிலையம் அருகில் மேட்டூர் - கொளத்தூர் செயலாளர் வசந்தி தலைமையிலும், மேச்சேரியில் ஒன்றிய கவுன்சிலர் பழனி தலைமையிலும், ஆத்தூ ரில் தாலுகா செயலாளர் முருகேசன் தலை மையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் மேவை சண் முகராஜா, மணிமுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமமூர்த்தி, பி.ராம மூர்த்தி, தாலுகா செயலாளர்கள் கே.எஸ்.பழனிசாமி, மணிமுத்து, மாவட்டக்்குழு உறுப்பினர் பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஆர்.எஸ்.பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் உட்பட கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். சாலப்பாளையத்தில் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். மாநகர் மிசின் வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் உட்பட கட்சி நிர் வாகிகள், வாலிபர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். புஷ்பா நகரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுத் தொழிலா ளர் சங்க துணைத் தலைவர் என்.பால சுப்பிரமணியம், சிபிஎம் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆட்டோ, பருத்தி நூல், கேஸ் சிலிண்டர் ஆகிய வற்றுக்கு மாலையிட்டும், ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோ பால், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜி.மூர்த்தி, சாலையோர சங்க தலைவர் பி.முருகேஷ், ஆட்டோ சங்க நிர்வாகிகள், சமையல் சங்க நிர்வாகி பாபு உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். சந்தைப் பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந் தரம், மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர். உடுமலை வட்டாச்சியர் அலுவல கம் முன்பு நகரச் செயலாளர் தண்ட பாணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், உடுமலை ஒன்றிய செயலாளர் கி. கனகராஜ், குடிமங்கலம் ஒன்றிய செயலா ளர் சசிகலா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.அவிநாசி, திருமுருகன்பூண்டி உள் ளிட்ட பல்வேறு இடங்களில் சிலிண்டருக்கு மலர் வளையம் வைத்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஏ.ஈஸ்வ ரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ். வெங்கடாசலம், ஆர்.பழனிச்சாமி, சிஐ டியு விசைத்தறி சம்மேளன மாநில தலைவர் பி.முத்துச்சாமி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தாராபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர் வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.