அவிநாசி, ஏப்.8- அவிநாசியில், சக்சம் அமைப்பும், அவிநாசி ரோட் டரி அமைப்பும் இணைந்து இலவச செயற்கைக்கால் பொருத்தும் நிகழ்ச்சியை நடத்தினர். இதில் 8 மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ.61 ஆயி ரம் மதிப்புள்ள செயற்கை கால் உபகரணங்கள் மற்றும் நவீன வீல்சேர் வழங்கப்பட் டது. மேலும், 16 பேருக்கு செயற்கை கால்கள் பொருத் துவதற்காக அளவீடு செய்யப் பட்டன. இந்நிகழ்ச்சியில், ரத் தினசாமி, தமிழ்செல்வன், விஜயகுமார், அம்மையப் பன், பாலச்சந்திரன் உள் ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங் கேற்றனர்.