districts

9 ஆடுகள் பலி: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், டிச.7 - காங்கேயம் அருகே சிவன்மலை ஊராட்சி அரசம்பாளை யத்தில் நாய்கள் கடித்ததில் இறந்த 9 ஆடுகளுக்கு இழப்பீடு  வழங்க விவசாயிகள் கோரியுள்ளனர். இதற்கிடையே இறந்த  ஆடுகளை உடற்கூறாய்வு செய்ய கிராம நிர்வாக அலுவலர் கால்நடை மருத்துவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அரசம்பாளையம் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் வெள்ளியன்று 27 ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. மாலை  தெருநாய்கள் அந்த ஆடுகளைக் கடித்துள்ளன. இதில், 7 குட்டி  ஆடுகள், 2 பெரிய ஆடுகள் இறந்துள்ளன. மேலும், இரு ஆடு கள் படுகாயம் அடைந்தன. இதையடுத்து, சிவன்மலை கிராம  நிர்வாக அலுவலர் எம்.சுகன்யா, சாவடிப்பாளையம் கால் நடை மருத்துவருக்கு ஆடுகளை உடற் கூராய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி கடிதம் அனுப்பியுள்ளார். விவசாயி ராமசாமிக்கு ரூ.1லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட் டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

தெரு நாய் களால் இழக்கப்படும் கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கு வது குறித்து அரசுக்குப் பரிந்துரை அனுப்பிய நிலையில்,  மாவட்ட ஆட்சியர் 45 நாட்கள் காலக்கெடு கொடுத்துள்ளார். எனவே விவசாயிகள் பொறுமை காத்து வருவதாகவும், நிவார ணம் கொடுப்பதற்கும், இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று விவசாயிகள் கூறி னர்.