திருப்பூர், மே 28 – புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சனிக் கிழமை நடந்த இப்போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராணி தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தெள.சம்சீர் அகமது தொடக்கி வைத்தார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் அகில இந்திய கோரிக்கை நாள் இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் படி நடத்தப்பட்ட இப்போராட்டதில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது, வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி கள் எம்.ராமசாமி, எம்.எஸ்.அன்வருல்ஹக், ஆர்.ராமன், ஏ.ராஜேஸ்வரி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன் போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.