திருப்பூர், டிச. 2 - திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் 1349 சந்தாக்களுக்கான தொகையாக ரூ. 26 லட்சத்து 28 ஆயிரத்து 250 வழங்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் 24-ஆவது மாவட்ட மாநாட்டு செந்தொண்டர் பேரணி பொதுக்கூட்டம் ஞாயிறு அன்று அவிநாசியில் நடைபெற்றது.
கொட்டும் மழைக்கு இடையே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தீக்கதிர் ஆண்டு சந்தா 1267, ஆறு மாதச் சந்தா 82 என மொத்தம் 1349 சந்தாக்களுக்கான தொகை 26 லட்சத்து 28 ஆயிரத்து 250 ரூபாயை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் ஒப்படைத்தார். நிகழ்வின்போது, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுகுமாறன், டி. ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், தீக்கதிர் கோவைப் பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.