districts

முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதர் சங்கம் ஆய்வு      

திருநெல்வேலி, ஏப் 5- நெல்லை மாவட்டம் முக்கூடல் உள்ள  ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மாத சங்கம் திடீர் ஆய்வு நடத்தியது. மாதர்சங்க ஒன்றிய தலைவரும் பாப்  பாக்குடி ஒன்றிய கவுன்சிலருமான சமாதானம்,  ஒன்றிய துணைதலைவர் பார்வதி  மற்றும் பூ. பார்வதி, பீடிசங்க மாவட்ட தலைவர் மாரிச்  செல்வம், விதொச மாவட்டசெயலாளர் அருணாசலம்  உள்பட பலர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர்கள்  அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளிடம் மருந்துகளின் இருப்புகள், மருத்துவர்களின் வருகை, மருத்  துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.