districts

img

நெல்லையில் 12ஆம் தேதி மாரத்தான் போட்டி சிஐடியு நிர்வாகிகள் பேட்டி

திருநெல்வேலி ,பிப். 8- பாளையங்கோட்டை யில் வரும் 12ஆம் தேதி பொது போக்குவரத்து மேம்பாட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடை பெறுகிறது. இதில் 3 மாவட் டத்தினர் பங்கேற்கின்றனர் என சிஐடியு நிர்வாகிகள் தெரிவித்தனர். நெல்லை  வண்ணா ரப்பேட்டையில் உள்ள சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க அலு வலகத்தில் சிஐடியு போக்கு வரத்து தொழிலாளர் சங்க மண்டல பொதுச் செயலா ளர் ஜோதி, மண்டலத் தலை வர் காமராஜ் ,சிஐடியு மாவட்டத் தலைவர் பீர் முகம்மது ஷா, சிஐடியு மாவட்டச் செயலாளர்  ஆர். முருகன் , மாநில உதவி தலைவர் ஆர்.எஸ்.செண்பகம் ஆகியோர் புதன்கிழமை செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்த னர். அப்போது அவர்கள் கூறியதாவது- தமிழக அரசு பட்ஜெட் டில் நிதி ஒதுக்கி, போக்கு வரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அன்றே பணப் பலன்க ளை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும். ஒப்பந்தப்படி ஓய்வூதியம் முறைப்படுத்த வேண்டும், 1.4.2003க்குபின் பணியில் சேர்ந்த தொழி லாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், போதுமான எண்ணிக்கை யில் பேருந்து விட வேண்டும்.

காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும், பேட்டா. இன்சென்டீவ் பிரச்ச னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், ஒப்பந்தங்களை முறையாக அமுல்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்புகளை அப்பீல் செய்ய கூடாது, வண்டி போஸ்டிங், ஊர்மாறுதலுக்கு கோட்பாடு உருவாக்கப்பட வேண்டும், அதிகாரிகளின் அடாவ டிக்கு முடிவுகட்ட வேண்டும் போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் மார்ச் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் 4 மையங்களில் இருந்து இருசக்கர வாகன பிரச்சாரம் இயக்கம் நடத்தப்படுகிறது விபத்துக்களை குறைக்க வும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும் போக்கு வரத்து நெரிசலை குறைக்க வும் பொது போக்குவரத்தை மேம்படுத்த வலியுறுத்தி யும் வரும் 12-ஆம் தேதி தமிழகத்தில் 27 நகரங்க ளில் புது போக்குவரத்து மேம்பாட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப் படுகிறது அதே போல் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியம் முன்பிருந்து மினி மரத்தான் போட்டி துவங்குகிறது.

இந்த போட்டி ஹைகிரவுண்ட் ரவுண்டானா ,சீனிவாச நகர் வழியாக மீண்டும் அண்ணா  ஸ்டேடியத்தில்  முடிவடை கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5000, இரண்டாம் பரி சாக மூன்றாயிரம் மூன்றாம் பரிசாக 2000 ,ஆறுதல் பரி சாக ஆண்கள் பிரிவில் 20 ,பெண்கள் பிரிவில் 20 பேருக்கு என தலா  200 ரூபாய் மற்றும் அனைவ ருக்கும் பாராட்டு சான்றி தழ்களும் வழங்கப்படுகி றது.போட்டியில் பங்கேற்க 7305815755  என்ற எண்ணில் வரும் 10ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.