தேனி, ஜூன் 23- தேனி -பெரியகுளம் சாலையில் மக்கள் கூடும் இடத்தில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார் பில் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி அல்லிநகரம் கூட்டுறவு சங்கம், இரண்டு நியாய விலை கடைகள்,மண்ணெண்ணெய் பங்க் என பெண்கள், முதியவர்கள் என மக்கள் கூடும் பெரியகுளம் சாலை யில் கடந்த 15ம் தேதி முதல் கடை எண் 8613 கொண்ட டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டு, அதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு, பெரும் போராட்டத்திற்கு பின் மதுக் கடை மூடப்பட்டது. டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள், பெண்கள் என பலதரப் பட்ட மக்களும் சிரமத்திற்கு உள்ளா கும் நிலை ஏற்படும். எனவே மதுக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 16 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை தலைமை யில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மாவட்ட ஆட்சி யர் முரளீதரன், மதுக்கடையை உட னடியாக இடமாற்றம் செய்வதாக உறுதியளித்தார். எனினும் மதுக் கடை அகற்றப்படவில்லை.
முற்றுகைப் போராட்டம்
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியா ழனன்று பிற்பகலில் மதுக்கடை முன்பு முற்றுகை போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. அதனை அறிந்த மதுக்கடை ஊழி யர்கள் கடையை அடைத்து விட்டு சென்றுவிட்டனர். மதுக்கடை முன்பு திரண்ட பொது மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் தாலுகாக்குழு உறுப்பி னர் முத்துக்குமார் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதன்பின்னர் விடுதலை சிறுத் தைகள் கட்சியினரும் போராட்டத் தில் கலந்து கொண்டனர். பின்னர் காவல்துறை துணை கண்காணிப் பாளர் சுதன்பால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மதுக்கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். அதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.முரு கன், சு.வெண்மணி, தாலுகா செய லாளர் இ,தர்மர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.நாகராஜ், டி. ஜெயபாண்டி, சமூக ஆர்வலர் மஞ்சில் செல்வி, தாலுகா குழு உறுப்பினர்கள் மா.காமுத்துரை, அப்பாஸ், ஏ.சி.காமுத்துரை மற்றும் எழுத்தாளர் அல்லி உதயன், கார்டூ னிஸ்ட் வீரா, விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் மாவட்டச் செய லாளர் நாகரத்தினம், நகர் செயலா ளர் ஈஸ்வரன், செயற்குழு உறுப்பி னர் மா.செல்லத்தம்பி, செய்தித் தொடர்பாளர் அன்பு வடிவேல் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கலந்து கொண்டனர்.