districts

img

தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுப்பு பாஜக அரசைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன.27- தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூரும் ஊர்தி யை புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செய லாளர் இ.தர்மர் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், மாவட்ட செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர், அண்ணல் அம்பேத்கர், நேரு ஆகியோரது உருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது .  கோம்பையில் எரியக்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சி.மு.இப்ராஹிம் ,ஏரியா செயலாளர் எஸ்.சஞ்சீவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூடலூரில் ஜி.பி.முருகன் தலைமை வகித் தார். ஏரியா செயலாளர் பி.ஜெயராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பி.ஜெயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேவாரத்தில் ஏ.பெருமாள் தலைமை வகித்தார்.மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி. வேலவன், எஸ்.சுருளிவேல் ,ஏரியா செயலாளர் டி .ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . போடி கட்டபொம்மன் சிலை அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.தங்கபாண்டி தலைமை வகித்தார். மூத்த தலைவர் கே. ராஜப்பன் ,எஸ்.கே.பாண்டியன் ,தாலுகா செய லாளர் எஸ்.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டியில் ஒன்றிய செயலாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் மா.தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை செயலாளர் ஏ.சுப்பிரமணி தலைமை தாங்கி னார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.இராமச்சந்திரன், எஸ்.வெண்மணி தாலுகா செயலாளர் எம்.வி .முருகன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜெயமங்கலத்தில் ராஜேந்திரன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை 
மதுரை மாநகர் மேற்கு - 2 ஆம் பகுதிக்குழு சார்பில் தியாகிகள் நினைவை போற்றி வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதனன்று ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் மெயின் ரோட்டில் 92 வது வார்டு நேதாஜி கிளைச் செயலாளர் மாரிக்கனி தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் ஆகி யோர் உரையாற்றினர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம. பாலசுப்பிரமணியம், பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில் குமார், மாவட்டக் குழு உறுப்பினர் டி.நாகராஜ் ஆகியோர் பேசினர்.
மதுரை புறநகர்
கட்சியின் அலங்காநல்லூர் ஒன்றியக் குழு சார்பில் குடியரசு தினத்தன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான ஏ.லாசர், மற்றும் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உமாமகேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினர் சொ.பாண்டியன், ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆண்டிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.  மேலூர் தாலுகா குழு சார்பில் அய்யம்பட்டி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாலுகாச் செய லாளர் எம்.கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  செல்லம்பட்டி ஒன்றியக் குழு சார்பில் கரு மாத்தூரில் ஒன்றிய செயலாளர் வி.பி.முருகன் தலைமை வகித்தார்மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் பி.எஸ். முத்துப்பாண்டி ஆகியோர் பேசினர். உசிலம்பட்டி ஒன்றியக் குழு சார்பில் முரு கன் கோவில் அருகே ஒன்றியச் செயலாளர் பி. ராமர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செ.முத்துராணி, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  கிழக்கு தாலுகா குழு சார்பில் யா.ஒத்தகடை யில் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, தாலுகாச் செயலாளர் எம். கலைச்செல்வன், உட்பட பலர் கலந்து கொண்ட னர். சேடபட்டி ஒன்றியக் குழு சார்பில் ஒன்றியச் செயலாளர் பி.ராஜாசங்கர் தலைமை வகித்தார்.