districts

தேனி அருகே தரமற்ற விதையால் 500 ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு தேனி ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் புகார்

தேனி, பிப்.21- தேனி அருகே தரமற்ற விதையை சாகு படி செய்ததால் 500 ஏக்கர் நெல் சாகுபடி  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேனி ஆட்சி யரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது . தேனி ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனாவை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கண்ணன், ஒன்றிய செயலா ளர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘மார்க்கையன் கோட்டை, குச்சனூர் பகுதியில் ஒரு குறிப்  பிட்ட நெல் ரகம் சாகுபடி செய்த விவசாயி கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500  ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட அந்த ரக நெல்லில் நோய்த்தாக்குதல் ஏற்  பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவார ணம் வழங்க வேண்டும். தரமற்ற அந்த  நெல் விதைகளை தடை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.