தேனி,பிப்.14- தேசியக் கல்விக் கொள் கைக்கு எதிராகவும், கல்வி நிலையங்களில் காவி சிந்தனைகளை விதைப் பதை தடுத்து நிறுத்த வேண் டும் என்று வலியுறுத்தி இந் திய மாணவர் சங்கம் சார் பில் பேரணி மற்றும் கருத்த ரங்கம் ஆண்டிபட்டியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜி. அருண் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சுந்தரவதனா வர வேற்றுப் பேசினார். மாநிலத் தலைவர் ஜி. அரவிந்தசாமி, மாநில துணைச் செயலாளர் ஜி. பாலா , மாவட்ட செயலாளர் வேல் பிரகாஷ் ஆகியோர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீவர்த்தினி நன்றி கூறினார். இதில் எம்.மோகன் குமார், பி.சே குவேரா, ஆர். தினேஷ்குமார் ,லெனின் ,ஜெ.ஹோசிமின், எம்.ஐஸ்வர்யா, பி.சிந்துநதி மற் றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர்.