தஞ்சாவூர், ஜூன் 15- ஊராட்சிகளில் பணி புரியும் தூய்மைப் பணி யாளர்களுக்கு நாளொன் றுக்கு சம்பளமாக ரூ.600 வழங்க வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சேது பாவாசத்திரம் ஒன்றியப் பேரவை, பேராவூரணி எம். எஸ்.விழா அரங்கில் செவ்வா யன்று மாலை செல்வி தலை மையில் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச் செல்வி பேசினார். தலைவ ராக தவமணி, செயலாளராக செல்வி, பொருளாளராக மேரி உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. அதிகரித்து வரும் கும்பல் பாலியல் வன்கொடு மைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு புறம் போக்கு மற்றும் வாடகை வீடுகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி, கூலியை ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பெருமகளூர் பேரூராட்சியில் நூறு நாள் வேலையை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். 60 வயது நிரம்பியோருக்கு முதியோர் ஓய்வூதியம் நிபந்தனை இல்லாமல் வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் மண்ணெண்ணெய் அளவை உயர்த்தியும், அனைத்து பொருட்களையும் தட்டுப்பா டின்றி வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட திருமண உதவித் திட்டத்தையும், தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை ஆயி ரத்தை உடனே வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் காலை 7 மணிக்கே வருகை பதிவு செய்ய வேண்டும் என நிர்ப்பந் தப்படுத்தக் கூடாது. ஊராட்சிகளில் பணி புரியும் தூய்மைப் பணியாளர் களுக்கு நாளொன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும். கொ ரட்டூர் அருகில் பொதுமக்க ளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.