கும்பகோணம், ஆக.25- கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி யில் (தன்னாட்சி) வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் முதல்வர் (பொ) மா.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் க.அன்புமணி வரவேற் புரை நிகழ்த்தினார். முகாமில் கும்பகோணம் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ஆ.மீனா ஆதார் எண்ணை கைபேசியில் VOTER HELP LINE செயலி மூலம் எவ்வாறு இணைப்பது என விளக்கி உரை நிகழ்த்தினார் முகாமில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி, ஒய்ஆர்சி, ஆர்ஆர்சி, எஸ்எஸ்எல் ஆகிய சேவை அமைப்புகளிலுள்ள மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந் நிகழ்ச்சியை என்.எஸ்.எஸ் திட்ட அலுவ லர்கள் ஜெ.செந்தில், த.தமிழ்வாணன், ந. ரமேஷ்குமார், சாமுவேல் எபினேசர், என்.ஆர்.விஜி, ஆர்ஆர்சி அலுவலர் அண்ணா துரை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். கல்லூரி நூலகர் ரா.சங்கரலிங்கம் நன்றி கூறி னார்.