தஞ்சாவூர், மார்ச் 29- பேராவூரணி தொகுதிக்கு நீராதா ரங்களை மேம்படுத்தும் வகையில், ரூ. 14.67 கோடி ஒதுக்கீடு செய்தமைக்கு, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருக னுக்கும் பேராவூரணி எம்.எல்.ஏ என்.அசோக்குமார் நன்றி தெரிவித்துள்ளார் இதுகுறித்து, எம்எல்ஏ என்.அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘பேராவூரணி பகுதி நீராதாரங்களை மேம்படுத்தும் வகையில், எனது கோரிக் கையை ஏற்று, பேராவூரணி வட்டம், சோம நாதன்பட்டினம் கிராமத்தில், முடியனாறு வடிகாலின் குறுக்கே நெடுகை 12.600 கி.மீ கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பேராவூரணி வட்டம், நாட்டாணிக் கோட்டை கிராமத்தில், பூனைக்குத்தியாறு ஆற்றின் குறுக்கே நெடுகை 10.30 கி.மீ-ல் அமைந்துள்ள பூனை குத்தியாறு அணைக் கட்டினை புனரமைக்கும் பணி ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப் படும். பேராவூரணி வட்டம், குருவிக்கரம்பை கிராமத்தில் அமைந்துள்ள தென்னங்காடு ஏரிக்கு நீர் வழங்க கல்லுக்குளம் வாரி யின் குறுக்கே நெடுகை 1.85 கி.மீ-ல் ஒரு அணைக்கட்டு அமைக்கும் பணி ரூ.3 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள் ளப்படும். இதன் மூலம் 639.73 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என சட்டமன்றத்தில் நீர்வளத்துறை மானியக்கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக பேராவூரணி சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் சார்பிலும், எனது சார்பிலும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பரிந்துரை செய்த நீர்வளத்துறை அமைச்ச ருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறப்பட்டுள்ளது.