தஞ்சாவூர், மே 27 - கடன் வழங்காமல் பார்வைக் குறைபாடுடைய பெண் மாற்றுத் திறனாளியை வங்கி நிர்வாகம் இழுத்தடிப்பதாக மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டச் செயலாளர் புகார் தெரிவித்தார். தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில், கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமையில் மாற்றுத்தி றனாளிகளுக்கான கோட்ட அளவி லான குறைதீர் கூட்டம் வியாழக் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத் தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் பி.சங்கிலிமுத்து மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை வலியு றுத்திப் பேசினர். அப்போது, மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் பேசுகை யில், “தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ராஜலட்சுமி பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், மாற்றுத்திற னாளிகளுக்கு தொழில் தொடங்க தமிழக அரசு மானியத்துடன் வழங்கும் கடன் பெறுவதற்காக வல்லம் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை நாடியுள்ளார். இதையடுத்து அவரது மனுவை பரிசீலனை செய்த வங்கி அதிகாரி கள், பெட்டிக்கடை வைத்து நடத்த கடை கட்டினால்தான் ரூ.75 ஆயிரம் கடன் வழங்க முடியும் என தெரி வித்துள்ளனர். இதையடுத்து சுப்பிர மணியன் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி ரூபாய் ஒரு லட்சம் செலவு செய்து கட்டிடம் கட்டியுள்ளார். இந்நிலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராஜலட்சுமிக்கு கடன் வழங்க முடியாது என வங்கி நிர்வாகம் மறுத்து வருகிறது.
எனவே கோட்டாட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ராஜலட்சுமி மற்றும் அவரது தந்தை சுப்பிரமணி யனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வங்கிக் கடன் கேட்டு மூன்று ஆண்டுகளாக அலைந்து வருகிறோம். தேவை யான ஆவணங்கள் அனைத்தை யும் பெற்று தந்து விட்டோம். மானி யத்திற்கான கடிதம் வேண்டும் என்று கேட்டனர். அதையும் வாங்கி கொடுத்தோம். காலக்கெடு முடிந்து விட்டது என்றனர். எனவே, மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மானியத்திற்கான கடிதத்தை பெற்றுக் கொடுத்தோம். இதையடுத்து வங்கி அதிகாரி கள் வந்து ஆய்வு செய்தனர். அப்போது கடை கட்டினால்தான் பெட்டிக் கடை வைக்க கடன் வழங்க முடியும் என்றனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி, இதுவரை சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, கட்டி டம், தளவாடங்களை தயார் செய்துவிட்டு, வங்கி அதிகாரிகளை அணுகினால், தஞ்சை சென்று உயரதிகாரிகளை சந்திக்க சொன் னார்கள். ஆனால், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கடன் வழங்க முடியாது. அவரால் தொழில் செய்து, திருப்பிக் கட்ட முடி யாது என அதிகாரிகள் எங்களை அலைக்கழிக்கின்றனர். கடன் வாங்கி தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்தால், இன்று ரூ. 1 லட்சம் கட னாளியாக மாறிவிட்டோம். நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்ற னர் வேதனையுடன். ராஜலட்சுமி திருச்சியில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளி யில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவர் என்பதும், தன்னுடைய சொந்த வேலைகளை தானே செய்யக்கூடிய திறன் பெற்றவர் என்றும் தெரிகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கடன் கிடைக்கவும், தொழில் தொ டங்கவும் உதவி செய்வாரா....?