districts

img

பயிற்சிக்கு வந்த கிராம நிர்வாக பெண் அலுவலர் மயங்கி விழுந்து பலி

தஞ்சாவூர், மே 5-  தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளி யில், கோட்ட அளவிலான கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி, ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வரு கின்றனர். இந்நிலையில், புதனன்று தஞ்சாவூர் அருகே கரந்தை வேலூர் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான புவனேஸ்வரி, (26) பயிற்சிக்காக காலை 11 மணிக்கு வந்தார்.அப்போது, பயிற்சி அறைக்கு செல்லும் முன்பாக, திடீரென மயங்கி விழுந்தார்.   அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனி யார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது, புவ னேஸ்வரியை பரிசோதித்த மருத்து வர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  இவர் வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கி றதா? என மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.