tamilnadu

வருவாய் ஆய்வாளர்  மயங்கி விழுந்து பலி

செங்கல்பட்டு, ஆக. 11- செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரிந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் திடீரென  மயங்கி விழுந்து உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 45). இவர், செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் முதுநிலை வருவாய் ஆய்வா ளராக பணிபுரிந்து வந்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னணி நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் திங்களன்று (ஆக.10) பணிக்கு  வந்த ஸ்ரீதர் நண்பகல் 12 மணியளவில் பணி  செய்து கொண்டிருந்தபோது இருக்கையி லேயே மயங்கி விழுந்தார். உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், அவருக்கு கொரோனா பரி சோதனை மேற்கொள்ளப்பட்டு, உடல் சவக்கிடங்  கில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த ஸ்ரீதரின் மனைவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலிய ராக பணியாற்றி வருகிறார். அருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.