districts

தஞ்சையில் படைவீரர்கள்  குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஏப்.7- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று காலை 10 மணிக்கு, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.  முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம். மனுக்களுடன் முன்னாள் படைவீரர் அடையாள அட்டையின் நகலினை இணைத்திடல் வேண்டும்.  மேலும், சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் முடிவுற்ற பின்னர் தொழில் முனைவோர் கருத்தரங்கு கூட்டம் நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்தில், பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, தங்களது துறையில் செயல் படுத்தப்படும் பல்வேறு சுய தொழில் திட்டங்கள் குறித்தும், அது தொடர்பான மானியங்கள் குறித்தும் எடுத்துரைக்க வுள்ளனர். எனவே, மேற்கண்ட கூட்டங்களில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.