தஞ்சாவூர், டிச.25- தஞ்சை மாவட்டம் திருவையாறு ஒன்றி யம், செந்தலை மேற்கு பகுதியில், வெண் மணி தியாகிகள் நினைவு தினத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய கிளை துவக்க விழா மற்றும் கொடி ஏற்று விழா, கிளைச் செயலாளர் கார்த்தி தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா கட்சிக்கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், மூத்த தோழர்கள் எம்.பழனி அய்யா, எம்.ராம், ஒன்றியக் குழு உறுப்பினர் என்.அறி வழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை ஒன்றியம், கரம்பயத் தில் வி.ராமையன் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் கொடி யேற்றி வைத்தார். வீரக்குறிச்சியில் கு.பெஞ்ச மின் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் கொடியேற்றி வைத் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக் கோட்டை ஒன்றியக் குழு அலுவலகம், கரிக்காடு ஆகிய இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரெ. ஞானசூரியன், சாமிநாதன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், வங்கி ஊழியர் சங்கம் தனபால், சிஐடியு ராஜேந்தி ரன், கந்தசாமி மற்றும் ஆட்டோ தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
கீழ்வெண்மணி 54 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் நினைவு தினக் கொடியை ஏற்றினார். மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் கட்சியின் மூத்த தோழர் எஸ்.கிருஷ்ணண், மகாலிங்கம், மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பலர் வீர வணக்கம் செலுத்தினர்.