கும்பகோணம், அக்.12 - இயற்கை விவசாயம் மூலம் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து நஞ்சில்லா உணவு வழங்க முன்வர வேண்டுமென விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை சார்பில் பாரம்பரிய புதிய நெல் ரகங்கள் சாகுபடி தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற் றது. முகாமிற்கு துக்காச்சி ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முன்னிலை வகித்தார். திருவிடைமருதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா தலைமை வகித்து பேசுகையில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டறிவு பயிற்சி நடத்தப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் பாரம்பரிய நெல் புதிய ரகங்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும். அதே நேரத்தில் செயற்கை உரங்களை பயன்ப டுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்வதால், பூச்சி மற்றும் நோய்கள் தாக்குத லின்றி பயிர் நன்றாக வளர்ந்து நஞ்சில்லாத, தரமான உணவை உற்பத்தி செய்யவும், பாரம்பரிய புதிய நெல் ரகங்களான மாப்பிளைசம்பா, சீரகசம்பா, காட்டுயா ணம், கறுப்புகவுனி, சிகப்புகவுனி, ஆத்தூர் கிச்சடி சம்பா, கருங்குறுவை போன்ற ரகங்களின் பண்புகள் மற்றும் சாகுபடிமுறை குறித்து பேசினார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய நோயியல் துறை பேராசிரியர் ராஜப்பன் பேசுகையில், பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் மற்றும் செரிமானம், நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கும் திறன் கொண்டது என்றார். வேளாண்மை அலுவலர்
செல்வராணி ஒருங்கிணைந்த நுண்ணூட்ட மேலாண்மை தொழில்நுட்பம் பற்றி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் சுந்தரேசன், ஒருங்கி ணைந்த உயிர் உரம் மேலாண்மை தொழில்நுட்பம் பற்றி கூறினார். அட்மா திட்டம் வட்டார தொழில் நுட்ப மேலா ளர் சக்கரவர்த்தி பேசுகையில், இயற்கை உயிர் உரங்க ளையும் பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்க வேண்டும். உயிர் உரங்கள், பசுந்தாள் உரம், பசுந்தழை உரம், மக்கிய இயற்கை உரம், பஞ்சகாவியா தெளித்தல், உயிரியல் பூச்சிநோய் மற்றும் களை நிர்வா கம் செய்து இயற்கை வேளாண்மையை பாதுகாக்க வேண்டும் என்றார்.