districts

img

சாலையை சீரமைக்க வலியுறுத்தி செங்கிப்பட்டியில் மறியல் 

தஞ்சாவூர், மார்ச் 20 - தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் வந்து செல்லும் மிக முக்கியமான பகுதியாக செங்கிப்பட்டி உள்ளது. திருச்சி,  தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக் கும் இங்கிருந்துதான் பொதுமக்கள் பேருந்து கள் மூலம் செல்கின்றனர். தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் இவ்வழியே சென்று  வருகின்றன. மேலும், அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், சுற்றுப்புறக் கிரா மங்களுக்கு சென்று வருகின்றன.  திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மதுக்கான் என்கிற தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் சானுரப் பட்டியில் (செங்கிப்பட்டி) திருச்சி - தஞ்சை -  கந்தர்வக்கோட்டை இணைப்பு சாலை, மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது.  நெடுஞ்சாலையில் பாலத்தின் கீழ் பகுதி யில் உள்ள சாலை பராமரிப்பின்றி மிகப்பெரிய பள்ளமாக  சிதைந்துள்ளது. இதனால் வாகன  ஓட்டிகள் தினமும் விபத்துகளை சந்தித்து வரு கின்றனர். இதனை  சீர்செய்யக் கோரி தொ டர்ந்து முயற்சி செய்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும்  என வலியுறுத்தி பள்ளத்தின் அருகிலேயே சாலையில் அமர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். இதையடுத்து, நீண்ட நேரத் திற்கு பிறகு அதிகாரிகள் அங்கு வந்து இன்னும் மூன்று தினங்களில் சிமெண்ட் சாலையாக அமைத்து தரப்படும் என உறுதி யளித்ததனர். இதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. சாலை மறியலில் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர், ஒன்றியக் குழு உறுப்பினர் கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.