தஞ்சாவூர், மே 31- கடையில் வேலை செய்து வந்த பெண்ணை வீட்டில் அழைத்து சென்று விடுவ தாக ஏமாற்றி அழைத்துச் சென்று, கூட்டுப் பாலி யல் வன்புணர்வு செய்த 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு கிரா மத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மே 11 ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்புவதற்காக காத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை, மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அவருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த இளைஞர் ஒருவர் வீட்டில் கொண்டு போய் விடுவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று அருகிலிருந்த முந்திரித் தோப்பில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து உள்ளார். மேலும், தனது நண்பர்களையும் வர வழைத்து கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங் களை நடத்தின. இந்நிலையில், முக்கிய குற்றவாளியான குருங்குளம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கொடியரசன் (22), அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் கண்ணன் (31), சாமிநாதன் (30), சுகுமாறன் (23) ஆகிய 4 பேர் மீதும் வல்லம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ரவளிப்பிரியா கந்தபுனேனி பரிந்துரை யின் பேரில், வல்லம் காவல் துணை கண்காணிப் பாளர் பிருந்தா தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணத்தை ஏற்று, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டனர்.