தஞ்சாவூர், ஆக.16 - உலகெங்கும் தமிழ்க் கல்வியை விரிவாக்கம் செய்யும் நோக்குடன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ் வளர் மையத்தின் மூலம் சன்மார்க்கம் தொடர்பான சான்றிதழ், பட்டயம் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்பு கள் தொடங்கப்பட உள்ளன. தமிழ் வளர் மையத்தின் மூலம் உலக நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் இந்தியாவிலுள்ள பிற மாநிலத் தமிழ் மாண வர்களுக்காக, பல்வேறு வகையான சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளைத் தமிழ் வளர் மையம் நடத்தி வரு கிறது. அதன் ஒரு பகுதியாக, சன்மார்க்கம் தொடர்பான படிப்புகளைச் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை யுடன் இணைந்து உலகம் முழுவதும் நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வள்ளலாரின் வம்சாவளித் தோன்றலான உமாபதி, ஈரோடு அருள் சித்த மருத்துவர் அருள் நாகலிங்கம், ஓய்வு பெற்ற காரைக்கால் மாவட்ட நீதியரசர் முனைவர் வைத்திய நாதன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. பின்னர், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் பேசுகையில், “தமிழ் வளர் மையத்திற்காக பல்கலைக்கழகத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள நவீன ஒலி-ஒளி இணைய வழிப் பதிவுக் கூடம் மூலம் இப்படிப்புகள் நடத்தப்படவுள்ளன. சான்றிதழ், பட்டயம் மற்றும் முதுநிலைப் பட்டயம் என பல்நிலைகளில் இப்படிப்புகள் நடத்தப்படும்” என்றார். இதில் சத்திய ஆய்விருக்கையின் முனைவர் சங்கர ராமன், வடலூர் சமரச சுத்த சன்மார்க்கத் தலைமைச் சங்கத் தின் பொதுச் செயலாளர் மருத்துவர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.