கிருஷ்ணகிரி,நவம்பர்.14- போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கினை விசாரிக்கப் பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி 13 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார்.
பின்பு பள்ளி தாளாளர் மற்றும் தலையை ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டானர். இந்த விசாரணாஇயின் போது சிவராமன் தற்கொலை செய்துகொண்டார்.
தற்போது இந்த வழக்கினை விசாரிக்க சுமதி சாய் பிரியா, பி.டி,ஜெனிபர் ஆகிய பெண் நீதிபதிகளை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.