districts

திருச்சி முக்கிய செய்திகள்

லாரி மோதி ஒருவர் பலி

புதுக்கோட்டை, நவ.13 - புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் அம்மாசத்திரம் கல்லுகுமியல்பட்டியைச் சேர்ந்தவர் ஜோசப் இமா னுவேல் (48). இவர்  தனது இரு சக்கர வாக னத்தில், செவ்வாயன்று மாலை கீரனூர் வந்து விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது, குளத் தூர் குழுமி கருப்பர் கோவில் அருகே டாரஸ் லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் ஜோசப்  இமானுவேல், சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கீரனூர் போலீசார், லாரியை ஓட்டி வந்த திருத் துறைப்பூண்டி யைச் சேர்ந்த தினேஷ் (35) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்துணவு  ஓய்வூதியர்கள்  ஆர்ப்பாட்டம் 

கரூர், நவ.13 - சத்துணவு மற்றும்  அங்கன்வாடி ஓய்வூதி யர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 அக விலைப்படியுடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில் கரூர் தலைமை தபால் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே. நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.பால கிருஷ்ணன், டிஎன்ஜிபிஏ சங்க மாவட்டத் தலை வர் சாமுவேல் சுந்தர  பாண்டியன், மாவட்டச்  செயலாளர் கெ.சக்தி வேல் ஆகியோர் கண்டன  உரையாற்றினர். மாவட்டப்  பொருளாளர் எஸ்.மாலதி நன்றி கூறினார்.

தஞ்சாவூர் பெரியகோயிலில்  நாளை அன்னாபிஷேகம்

தஞ்சாவூர், நவ.13 -  ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு நவ.15-இல் பச்சரிசி,  காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் பெரியகோயில் கருவறையில் உள்ள பெரு வுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும். ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள  லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப் பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி  பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நவ.15 இல் ஐப்பசி மாத பவுர்ணமி யையொட்டி பக்தர்கள் வழங்கும் அரிசி சாதமாக தயார்  செய்யப்பட்டு, பெருவுடையார் திருமேனி முழுவதும்  சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகை களால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடை பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்களுடன் இணைந்து தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வரு கின்றனர்.

கரூரில் 147 கிலோ  போதைப் பொருள் பறிமுதல்

கரூர், நவ.13 - கரூர் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட கரூர் - ஈரோடு  சாலையில் குட்டக்கடை அருகே செவ்வாயன்று அதிகாலை நெடுஞ்சாலை ரோந்து எண்.3-இல் தலைமை  காவலர் ஆண்டனி இளங்கோ மற்றும் முதல் நிலை  காவலர் தீனதயாளன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் அரசால் தடை செய்யப் பட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட் 120 கிலோ, கூல் லீப் 10 கிலோ மற்றும் விமல்  பான்மசாலா 17 கிலோ என மொத்தம் 147 கிலோ குட்கா  பொருட்களை கைப்பற்றினர்.  இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், “நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள  ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த தேவா என்ற தேவராஜ்  (42), காரை ஓட்டி வந்துள்ளார்.  அவர் மீது வழக்குப்  பதியப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இதில் சிறப்பாக பணியாற்றி, தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றிய காவலர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டினார்.

23 மாற்றுத்திறனாளிகளுக்கு  தேசிய அடையாள அட்டை வழங்கல்

பெரம்பலூர், நவ.13- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச  மருத்துவ முகாம் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை)  அய்யாசாமி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வேப்பூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை மற்றும் தேசிய அடையாள அட்டை  அட்டை, யுடிஐடி அட்டை பதிவு செய்தல்  மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படு பவர்கள் கண்டறியப்பட்டனர். எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் செந்தில்குமார், மனநல மருத்துவர் அசோக், கண் மருத்து வர் மாலினி, காது மூக்கு தொண்டை மருத்து வர் சிவக்குமார், காது பரிசோதகர் ராகவி,  மனநல ஆலோசகர் புவனேஸ்வரி ஆகியோர்  மாற்றுத்திறனாளி குழந்தைகளை பரிசோ தனை செய்தனர்.    இதில் தகுதியுடைய பிறப்பு முதல் 18  வயதுடைய நான்கு குழந்தைகளுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட 19 மாற்றுத்திறனாளி களுக்கும் என மொத்தம் 23 மாற்றுத்திற னாளிகளுக்கு புதிதாக தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி என 2 குழந்தைகள் உதவி உபகரணங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்ற னர். இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவ லர்கள் சம்மனசுமேரி, கண்ணதாசன், ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி புள்ளியியல் அலுவலர்  சதீஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதி தாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சித்ரா நன்றி  கூறினார்.

திருச்சி மாநகர காவல்துறையை கண்டித்து  நாளை சுமைப் பணி தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.13 - வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்திய முதலாளிகளுக்கும், அவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் திருச்சி மாநகர காவல்துறையை கண்டித தும் வெள்ளியன்று குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25  ஆண்டுகளாக சங்கம் அமைத்து கூலி  உயர்வு, போனஸ், பணி பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை போராடியும், தொழிலாளர் துறை மூலமாகவும் பெற்று வந்தனர். இந்நிலையில் வேஸ்ட் பேப்பர் கடை முதலாளிகள், மதுரை உயர்  நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமா னாலும் வேலைக்கு வைத்து கொள்ள லாம் என தொழிற்சங்கத்திற்கு தெரியா மல் ரகசியமாக உத்தரவு பெற்றுள்ளனர். அந்த உத்தரவில், 20 ஆண்டுகள் அங்கு வேலை செய்யும் 42 தொழிலா ளர்களை வெளியேற்றவோ, வேலை  நீக்கம் செய்யவோ எந்த உத்தரவும்  இல்லை. இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை சட்டவிரோதமாக, இந்த  தொழிலாளி, முதலாளி பிரச்சனைக்குள்  நுழைந்து பீகார் மாநிலத் தொழிலா ளர்களை குறைந்த கூலிக்கு அமர்த்தி யுள்ள முதலாளிகளுக்கும், பீகார் தொழி லாளர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து  வருகிறார்கள்.  இந்த செயல் தொழிலாளர்கள் மத்தி யில் இன மோதலை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும். மாநில அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலாகும். மேலும் தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொழிலாளர் உதவி ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளன. மேலும் மதுரை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர் தரப்பு ரிட் மனு WP(MD) 26086/24 நிலுவையில் உள்ளது.  இந்நிலையில் முதலாளிகள் குறைந்த  கூலி கொடுத்து லாபமடைய மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக  செயல்படும் திருச்சி மாநகர காவல் துறையை கண்டித்து அனைத்து சுமைப்  பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  நவ.15 அன்று காலை 10 மணிக்கு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொழி லாளர்கள் குடும்பத்துடன் முற்றுகை யிடும் போராட்டம் நடைபெற உள்ளது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருவோணம் பகுதியில்  வளர்ச்சி பணிகள் துவக்கம்

தஞ்சாவூர், நவ.13 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருவோணம் ஒன்றியம், நெய்வேலி ஊராட்சி, செட்டித் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு நிதியிலிருந்து, சாலை அமைக்கும் பணி ரூ.13  லட்சத்திலும், வெங்கரை கோட்டைக்காடு அரசு மேல்நிலைப்  பள்ளியில், மாணவர்கள் மிதிவண்டிகளை நிறுத்துமிடம் ரூ.12 லட்சத்திலும் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகளை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.  தி.மு.க திருவோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் சோம. கண்ணப்பன், ஒன்றியக்குழு தலைவர் செல்லம் சௌந்தர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.2 ஆயிரம் வரை  மல்லிகைப் பூ விலை உயர்வு

சின்னாளப்பட்டி, நவ.13- திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொடைரோடு, பள்ளபட்டி, முருகத்துரான்பட்டி, சிலுக்குவார்பட்டி, கொங்கப்பட்டி, மைக்கேல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப்  பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக இப்பகுதி யில் பெய்து வந்த தொடர் மழை,  பனிப்பொழிவு காரணமாக பூக்களின்  உற்பத்தி மற்றும் வரத்து வெகுவாக  குறைந்தது. இதனால் பிரசித்தி பெற்ற நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கிலோ 1200 முதல் 1500 ரூபாய் வரை விற்பனையானது.  தற்போது சுபமுகூர்த்தம் மற்றும்  விஷேச நாள் என்பதால் வெளியூர் வியா பாரிகள், சில்லரை வியாபாரிகள் குவிந்த னர். இதனால் புதனன்று மல்லிகைப்  பூவின் விலை ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை விற்பனையானது. அதே போல முல்லை ரூ.650,பிச்சி ரூ.600, ரோஜா ரூ.200, செவ்வந்தி ரூ.150, நாட்டு சம்பங்கி ரூ.200, ஒட்டு சம்பங்கி  ரூ.100, செண்டு மல்லி ரூ.110 என விற்ப னையாகி வருகிறது. இதனால் விவ சாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நவ.16, 17, 23, 24 இல் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

தஞ்சாவூர், நவ.13 -  வாக்காளர்கள் சேர்க்கை சிறப்பு முகாம் கள் நடைபெற உள்ளது குறித்து பேரா வூரணி வட்டாட்சியர் இரா.தெய்வானை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி யில், 260 வாக்குச்சாவடிகள் அமையப் பெற்றுள்ள மையங்களில், வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்த்தல் நீக்கம், திருத்தம் மற்றும்  முகவரி மாற்றம் செய்ய வசதியாக தேர்தல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, நவ.16 (சனிக்கிழமை), நவ.17 (ஞாயிற்றுக்கிழமை), நவ.23 (சனிக்கிழமை), நவ.24 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நான்கு நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30  மணி வரை நடைபெறவுள்ளது. பொது மக்கள்  இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேற்படி முகாமினை பயன்படுத்திக் கொள்ள இயலாத வாக்காளர்கள், பேராவூரணி  வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் 28.11.2024 வரை காலை  10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தேர்தல்  படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.  நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in  என்ற இணையதளம் மற்றும் Voters Help Line  என்ற Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்க லாம். மேலும் விபரங்கள் அறிய 1950 என்ற  கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்து உள்ளார்.

9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.16, 19 தேதிகளில் கறவை மாடுகளுடன்  பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

திண்டுக்கல், நவ.13- பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி தர வேண்டும்; கோமாரி நோய் தடுப்பு  ஊசி போட வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 11 ஆவின் மையங்கள் முன்பாக கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அது பற்றிய விவரம் வரு மாறு:  திண்டுக்கல்லில் தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் வெண்மணிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.காசிமாயன், தமிழ்  நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் என்.பெருமாள், மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. தற்போது பசுமாட்டு பால் லிட்ட ருக்கு ரூ.35 தரப்படுகிறது. எனவே கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி ரூ.45 வழங்க ஆவின் நிர்வாகம் முன்வரவேண்டும். அதே போல்  எருமை பால்  லிட்டருக்கு ரூ.10 சேர்த்து ரூ.55 ஆக வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருப்பதற்காக தமிழ்நாடு அரசு  தடுப்பு ஊசி ஆண்டுக்கு 2 முறை போட்டு வரு கிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் தடுப்பூசி  போடப்பட்டது. அதன் பிறகு 2வது தடுப்பூசி செப்டம்பர் மாதம் போட வேண்டும். ஆனால் தற்போது கால்நடை கணக்கெடுப்பு நடைபெறு வதன் காரணமாக இந்த ஆண்டு நிறுத்தி வைக்  கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். வடகிழக்கு பருவமழையின் காரணமாக சீதோசன நிலை மாறி உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக கால்நடைகளுக்கு கோமாரி தொற்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கணக்கெடுப்பு பணியை கார ணம் காட்டி தடுப்பூசி போடுவதை கால்நடைத் துறை நிறுத்தக்கூடாது. உடனடியாக அனைத்து  கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை  துவங்க வேண்டும். மானிய விலையில் கலப்புத் தீவனம் வழங்க வேண்டும். ஆண்டு முழுவதும் மாட்டிற்கான இன்சூரன்ஸ், சைலஸ் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்கும் கால் நடை மருத்துவமனையை துவங்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த 8 மாதங்களாக ஆவினில் வழங்காமல் நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை உட னடியாக வழங்க வேண்டும் போன்ற 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்  மாவட்டம் முழுவதும் உள்ள 11 ஆவின் மையங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  வருகிற நவம்பர் 16ம் தேதி குஜிலியம்பாறை யிலும், நவ.19ல்  தர்மத்துப்பட்டியிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது.     (ந.நி.)

நாளை தோழர் எஸ்.ஆர்.பாலன் படத்திறப்பு

திருச்சிராப்பள்ளி, நவ.13 - 1957 ஆம் ஆண்டு முதல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு உறுப்பினராகவும், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவருமான திருச்சி மாவட்டக் குழு வின் மூத்த தோழர் எஸ்.ஆர்.பாலன் (90) உடல் நலக்குறை வால் கடந்த நவ.8 அன்று காலமானார். தோழர் எஸ்.ஆர்.பாலன் படத்திறப்பு திருச்சி கே.கே.நகர்  ராஜாஜி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நவ.15 (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் ஒரு மணியளவில் நடை பெறுகிறது. தோழர் எஸ்.ஆர். பாலன் உருவப்படத்தை மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்துராஜ் திறந்து வைக்கிறார். இதில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவி.வெற்றிச் செல்வன், அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி, சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் சம்பத், சிஐடியு புறநகர்  மாவட்டச் செயலாளர் சிவராஜ் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை:  போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது

கரூர், நவ.13 - பள்ளியில் பயிலும் அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தந்தை- மகன் உள்பட 3 பேரை குளித்தலை போலீ சார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அனைத்து  மகளிர் காவல் நிலையம் சார்பில் குளித்தலை  வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்து  பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாயன்று அரசுப் பள்ளி ஒன்றில், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, மாணவி ஒருவர் போலீசாரிடம் “தங்களது வீட்டின் அருகே வசிக்கும் தனது சித்தப்பா செல்வம் மற்றும் அவரது மகனான பிளஸ் 1  பயிலும் மாணவர் ஆகியோர் எனக்கும், எனது  தங்கைக்கும் நாள்தோறும் பாலியல் தொந்த ரவு கொடுப்பதாகவும், இதற்கு எங்களது தாய் ஜோதி உடந்தையாக இருப்ப தாகவும்” கூறியுள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த மகளிர் காவல் நிலைய போலீசார், உடனே கரூர்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர் கனகவல்லிக்கு தகவல்  தெரிவித்தனர். இதையடுத்து கனகவல்லி அளித்த புகாரின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ சார் செல்வம், அவரது மகனான பிளஸ் 1 மாண வர் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த மாணவிகளின் தாய் ஜோதி ஆகி யோரை போக்சோ சட்டத்தின்கீழ் நள்ளிரவில்  கைது செய்தனர்.  பின்னர் செல்வம், அவரது மகன் மற்றும்  ஜோதி ஆகியோரை கரூர் மகளிர் விரைவு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூவரும் சிறை யில் அடைக்கப்பட்டனர். இதில் பிளஸ் 1 மாண வர் திருச்சி சிறுவர் நல சீர்திருத்த பள்ளி சிறை யில் அடைக்கப்பட்டார்.