districts

தமிழகத்தை பாலைவனமாக்கக் கூடாது காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிடுக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கும்பகோணம், ஜூன் 20 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநல்லூரில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க  ஒன்றிய பேரவை ஒன்றி யத் தலைவர் குணசேகரன் தலைமை யிலும் ஒன்றிய செயலாளர்  கணேசன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் டி.ரவீந் திரன் சிறப்புரையாற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் கூறியதாவது: தமிழகத்தை பாலைவனமாக்கும் வகையில் கர்நாடகாவில் ஆளும் பாஜக  அரசு காவிரியின் குறுக்கே மேகதாது வில் புதிய அணை கட்ட முயற்சிக்கிறது.  இதற்கு ஒன்றிய அரசு துணை நிற் கிறது. இதற்கேற்ற வகையில்தான் காவிரி ஆணைய தலைவரின் பேச்சும் நடவடிக்கையும் அமைந்துள்ளது. இது விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. அந்த பேச்சை ஆணையத் தலைவர்  வாபஸ் பெற வேண்டும். ஒன்றிய அரசும்  அணை கட்ட அனுமதிக்க கூடாது. இதற்காக மாநிலம் தழுவிய பெரிய அள விலான போராட்டத்தை நடத்த ஆலோ சித்து வருகிறோம். டெல்டா பகுதிகளில் தாமதமின்றி உரிய காலத்தில் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் மூட்டைகளை திறந்த வெளி கிடங்குகளில் வைப்பதால், லட்சக் கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வீணா கின்றன. இதனால் அரசுக்கு பல கோடி  ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, போதுமான அளவிற்கு செட்டு கள் அமைக்க வேண்டும். அதுபோலவே ஒன்றிய அரசு, 2023 ஆம் ஆண்டு நெல்லுக்கான விலையை கிலோ ஒன்றுக்கு ரூபாய் ஒன்று மட்டும்  உயர்த்தி அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மோடி அரசு இந்திய விவ சாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத் துள்ளது. கேரள அரசு குவிண்டால் நெல்லுக்கு  ரூ.2,850 என அறிவித்து கொள்முதல் செய்து வரும் வேளையில், உற்பத்தி செலவை கணக்கிட்டு அதனுடன் 50 சத வீதம் சேர்த்து விலையினை நிர்ணயம்  செய்ய வேண்டும். மேலும் சுவாமிநாதன்  ஆணைய பரிந்துரையை ஏற்று ஒன்றிய- தமிழக அரசுகள் செயல்பட வேண்டும்.  இவ்வாறு டி.ரவீந்திரன் கூறினார்.