districts

தீண்டாமையை கடைப்பிடித்தால் கடும் நடவடிக்கை கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

தஞ்சாவூர், டிச.8-  தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு அருகேயுள்ள கிளாமங்கலத்தில் நிகழ்ந்த தீண்டாமை பிரச்சனை தொடர்பாக, தஞ்சாவூர் கோட்டாட்சியர் தலைமை யில் அமைதிப் பேச்சுவார்த்தை புதனன்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்துக்கு உட்பட்ட கிளாமங்கலம் கிரா மத்தில் பட்டியல் இன மக்க ளுக்கு இரட்டைக் குவளை  முறை, முடி திருத்த மறுப்பு, மளிகைக் கடையில் பொருட்  கள் வழங்க மறுப்பு உள்  ளிட்ட தீண்டாமைக் கொடு மைகள் நிகழ்வதாகப் புகார்  கள் எழுந்தன.  இதைத் தொடர்ந்து அங்கு  அமைதியற்ற சூழ்நிலை நில வியது. இதன் காரணமாக தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற் றது.  கோட்டாட்சியர் எம்.ரஞ்  சித் தலைமையிலும், தொடர்  புடைய துறை அலுவலர்கள் முன்னிலையிலும் நடை பெற்ற இக்கூட்டத்தில் இரு தரப்பினரும் பங்கேற்றனர்.  இதில், கிளாமங்கலம் கிராமத்தில் தேநீர் கடைக ளில் இரட்டை குவளை  முறையைக் கடைக்காரர் கள் யாரும் கடைபிடிக்கக் கூடாது. ஊரில் பொதுவாக இருக்கக்கூடிய மளிகை கடைகளில் அனைத்து சமூ கத்தினரும் பொருட்களைக் கடைக்காரர்கள் வழங்க  வேண்டும்.

ஊரில் இருக்  கக்கூடிய முடி திருத்தும் நிலையத்தில் அனைத்து சமூ கத்தினருக்கும் முடி திருத் திட அத்தொழில் செய்பவர் முன்வர வேண்டும். கிளாமங்கலம் கிராமத்  தில் இனிவரும் காலங்களில், கால்நடை இறந்தால் எதிர் தரப்பினரை அப்புறப்படுத் தச் சொல்லி வற்புறுத்தவோ, ஊரில் நிகழக்கூடிய மர ணங்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய சொல்லி கட்டாயப் படுத்தவோ, முக்கிய அறி விப்பை ஊருக்கு தெரிவிக் கும் பொருட்டு தண்டோரா  போடச் சொல்லியோ யாரும் தெரிவிக்கக் கூடாது. பட்டி யல் இன மக்களை அவ மதிக்கும் வகையிலும், தீண்  டாமையைக் கடைப்பிடித்தா லும் கடும் நடவடிக்கை எடுக்  கப்படும்.  இரு தரப்பினரும் இந்த உத்தரவை மதித்து ஊரில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்  சனை எழாதவாறு நடந்து கொள்ள வேண்டும். தவறும் நபர்கள் எந்த தரப்பினரை சார்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி  கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் பன்னீர்செல்வம், ராஜேந்திரன், அபிமன்னன், குருந்தையன், ராஜேந்திரன், திங்கள்கண்ணன், முருகேஷ், பழனிமாணிக்கம், காவல்  துணைக் கண்காணிப்பாளர் கள் பிரசன்னா (ஒரத்தநாடு), க.ராஜமோகன், ஒரத்தநாடு வட்டாட்சியர் சுரேஷ் உள்  ளிட்டோர் கலந்து கொண்ட னர்.