districts

இ-சேவை மையங்கள் தடையின்றி செயல்படுவதை பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் தொலைதொடர்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் கோரிக்கை

கும்பகோணம், செப்.20 -  காவிரி நதிநீர் படுகை கும்ப கோணம் தொலைத் தொடர்பு மாவட்டத் தின் முதலாவது தொலைபேசி ஆலோ சனை குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், தொலைத் தொடர்பு ஆலோசனைக் குழு தலைவருமான செல்வராஜ் தலைமையில் நடை பெற்றது. இதில் தொலைபேசி ஆலோசனைக் குழு துணைத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கல்யாணசுந்தரம் மற்றும் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். துணை பொது மேலாளர் ராஜகுமார் வர வேற்றார்.  பிஎஸ்என்எல் கும்பகோணம் வழங்கி வரும் செல்பேசி மற்றும் செல் சேவைகளை மேம்படுத்துமாறும், குறிப்பாக அரசு அலுவலகங்கள், தமிழக அரசின் இ-சேவை மையங்களில் சில பகுதிகளில் இணைய சேவை பழுதின் காரணமாக செயல்படாத நிலை உள்ளது. பொது மக்களுக்கு பயனுள்ள சேவைகள் வழங்கப்படுவதால், அனைத்து இ- சேவை மையங்களும் தடையின்றி செயல்படுவதை பிஎஸ்என்எல் நிறு வனம் உறுதிசெய்ய வேண்டும். செல் போன் கோபுரங்களை பராமரித்து தடை யின்றி அலைபேசி சிக்னல்கள் அனைத்து  இடங்களிலும் வழங்க வேண்டும்.  கஜா புயலின் காரணமாக சாய்ந்து  போன அலைபேசி கோபுரங்களை மீண்டும் புனரமைத்து, சேவைகள் வழங்க வேண்டும். வங்கி கிளைகளுக் கான இணைய சேவையினை மேம்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கல்யாணசுந்தரம் மற்றும் ராம லிங்கம் பேசினர். கூட்டத்தில் தமிழக அரசு தலைமை  கொறடா கோவி.செழியன், கும்பகோ ணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன், ஆலோசனைக் குழு தொலைபேசி உறுப்பினர்கள் கோவி. அய்யாராசு, பிரபாகரன், சுப்புராயன், கண்ணன், மனோகரன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் ஆலோசனை வழங்கி னர். பொது மேலாளர் பாலசந்திர சேகர் மேற்கண்டோர் வழங்கிய ஆலோ சனைகளை ஏற்று கூறுகையில், “தக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் 4ஜி சேவை வழங்குவ தற்கான ஆயத்தப் பணிகள் நடை பெற்று வருகிறது. நாகப்பட்டினம் பகுதி களில் அடுத்தக் கட்டமாக 4ஜிசேவை  வழங்கப்படும் மற்றும் அக்கரைப் பேட்டை, திருமலைராஜபுரம் கிராமங் களில் 4ஜி சேவைகள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். துணை பொது மேலாளர் (நெட் வொர்க்) சிவ சங்கரன் நன்றி கூறினார்.