districts

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை? மல்லிப்பட்டினம் கடைவீதியில் சுகாதாரத் துறை ஆய்வு

தஞ்சாவூர், ஏப்.22 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் கடைவீதி யில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.எம்.ராமலிங்கம் மேற்பார்வையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, பள்ளிக்கூடங்களை சுற்றி  100 மீட்டர் தூரத்திற்குள் புகையிலைப்  பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற னவா, 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என அறி விப்பு வைக்கப்பட்டுள்ளதா, கடைவீதியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா  உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை  செய்யப்படுகின்றனவா என ஆய்வு நடத்தி னர்.  மேலும், உணவகங்கள், பேக்கரி, மளிகைக் கடை ஆகியவற்றில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், தயாரிப்பு தேதி, காலா வதி தேதி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. கெட்டுப் போன உணவுப்பொருட் கள், தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு நடத்தி, காலா வதியான பொருட்களை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், விதிமீறிய கடை களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.