districts

விவசாயிகளை ஏமாற்றும் ஒன்றிய அரசை கண்டித்து ஜூலை 31-ல் சாலை மறியல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டி

தஞ்சாவூர், ஜூலை 9-  தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்ட மாநாடு ஒரத்த நாட்டில் நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இந்த ஆண்டு காவிரி டெல்டா பகுதி யில் பாசனத்திற்காக மே 24 ஆம்  தேதியே தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இன்று வரை குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய உரம், இடுபொருட்கள் முழு மையாக வழங்கப்படாமல் உள்ளன. இதனால், பாசனத்திற்கு தண்ணீர் வந்தாலும், விவசாயப் பணிகளை செய்ய முடியாத நிலைக்கு விவசாயி கள் தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரிகள் உரிய காலத்தில் ஏற்பாடுகளை செய்யா ததால் தண்ணீர் திறந்து விட்டும், பயன் இல்லாத நிலை உள்ளது. குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்கக் கூடிய  பொருட்களை இப்போதுதான் வழங்க  ஆரம்பித்துள்ளார்கள். இந்த கால தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்

நெல் கொள்முதல் 
தமிழ்நாடு அரசு நெல் கொள் முதல் என்பதை கைவிட்டு, தனியா ருக்கு வழங்கும் திட்டத்தை அறிவித்திருக் கிறார்கள். அரசு கொள்முதலை கை விட்டால் அரசு அறிவிக்கின்ற விலை விவசாயிகளுக்கு கிடைக்காமல் போய்விடும். ஏற்கனவே இருக்கக் கூடிய பல்வேறு குறைபாடுகள், முறைகேடுகள் மேலும் அதிகரிக்கக் கூடுமே தவிர குறையாது. அரசு நெல்  கொள்முதலை தனியாருக்கு விடுவது  விவசாயிகளுக்கு மிக மிக பாதகமான சூழலை ஏற்படுத்தும்.  எனவே, தமிழ்நாடு அரசு நெல் கொள்முதலை தனியாருக்கு விடு வதை கைவிட வேண்டும். தொடர்ந்து அரசாங்கமே நெல் கொள்முதலை நேரடியாக செய்ய வேண்டும். அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு உரிய கிட்டங்கி வசதிகளை அரசு செய்ய வேண்டும். உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமே தவிர, பாதுகாப்பாக வைக்க முடியவில்லை என்பதற்காக தனியாரிடம் விடுவதை ஏற்க முடி யாது. அவ்வாறு தனியாரிடம் கொள் முதலுக்கு விட்டால் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுவது தவிர, தமிழக உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.

சாலை மறியல் 
ஒன்றிய பாஜக அரசு தில்லியில் போராடிய விவசாயிகளுக்கு அளித்த  வாக்குறுதிக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. அனைத்து வேளாண் விளை பொருள்களுக்கும் உரிய ஆதார விலை தருவதற்கு உத்தரவாதப்படுத்தக் கூடிய வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அதற்காக ஒரு குழுவை அமைப்போம் என வாக்குறுதி தந்தது.  இதுவரை அதற்கான எந்த ஏற்பாடு களையும் செய்யாமல், நாடு முழு வதும் உள்ள கோடிக்கணக்கான விவ சாயிகளை ஒன்றிய பாஜக அரசு ஏமாற்றி  வருகிறது.  விவசாயிகளை ஏமாற்றி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஜூலை 31 ஆம் தேதி நாடு முழுவதும்  பல லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க கூடிய சாலை மறியல் போராட்டம் நடத்த ஐக்கிய விவசாயி கள் முன்னணி திட்டமிட்டுள்ளது.  இதையொட்டி தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான இடங்களில் சாலை மறியல் நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளது. தஞ்சை மாவட்டத்திலும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறி யல் போராட்டம் ஜூலை 31 இல் நடை பெறும். விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறை வேற்ற ஒன்றிய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் கூறினார். அப்போது, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணைத் தலைவர் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டப் பொரு ளாளர் எம்.பழனிஅய்யா, வரவேற்பு குழு தலைவர் என்.சுரேஷ்குமார் மற்றும்  நிர்வாகிகள் உடனிருந்தனர்.