districts

மாணவர்களுக்கு  கல்வி உபகரணங்கள் வழங்கிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர்

தஞ்சாவூர், ஏப்.17 - ஒரத்தநாடு அருகே பாளாமுத்தூர் குடிக்காடு கிராமத்தில்  இருந்து, 33 ஆண்டுகாலம் ராணுவத்தில் பணியாற்றிய ராணுவ  கமாண்டர் ஒருவர், ஊர் திரும்பிய முதல் நாளே, தமிழக அரசு  அறிவித்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும் 50  மாணவர்களுக்கு 30 ஆயிரம் மதிப்பிலான கல்வி உபக ரணப் பொருட்களை வழங்கினார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாளா முத்தூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர்  பெத்தபெருமாள். இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு, ராணுவப்  பணியில் சேர்ந்து கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். மொத்தம் 33 ஆண்டுகள் 4 மாதங்கள் பணி நிறைவு பெற்று  சொந்த ஊர் திரும்பி உள்ளார். சொந்த ஊர் திரும்பிய ராணுவ கமாண்டர் பெத்தபெரு மாளுக்கு, பணி நிறைவு பாராட்டு விழாவை  உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சோழநாட்டு பட்டாள முன்னாள், இன்னாள்  முப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் இணைந்து நடத்தினர். பணி ஓய்வு பெற்ற ராணுவ  கமாண்டர் பெத்தபெருமாள் இந்திய ராணுவத்தில் என்.எஸ்.ஜி  கமாண்டோவில் நான்காண்டுகள் சிறப்பு கமாண்டராக பதவி  வகித்துள்ளார்.  மேலும், தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங் களைச் சேர்ந்த இன்னாள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும்  துணை ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றி ணைந்து, தமிழக அரசு அறிவித்துள்ள இல்லம் தேடிவரும் கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கும் பள்ளி மாணவ-மாணவி களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்ற னர்.  அதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை ஒரத்தநாடு அருகே உள்ள பாளாமுத்தூர் குடிக்காடு கிராமத்தில் இல்லம் தேடி வரும் கல்வித்திட்டத்தில் பயின்றுவரும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, ஓய்வு பெற்ற ராணுவ  வீரர் பெத்தபெருமாள் மற்றும் சோழ நாட்டு பட்டாளம் இந்திய  ராணுவ வீரர்களின் சங்கத்தின் சார்பாக ரூ.30 ஆயிரம் மதிப்பி லான எழுதுபொருட்கள், பேனா, பென்சில், டிக்சனரி, நோட்டு  உள்ளிட்டவைகளை வழங்கினர்.