districts

சாஸ்த்ரா கல்வி நிறுவனம் ஆக்கிரமித்த இடத்தை மீட்டு ஏழைகளுக்கு மனைப் பட்டா வழங்குக! ஜூலை 12 இல் வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 14-  சாஸ்த்ரா கல்வி நிறுவனம் ஆக்கிர மிப்பு செய்துள்ள 55 ஏக்கர் இடத்தை மீட்டு, வீடற்ற ஏழைகளுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு  கூட்டம், தஞ்சாவூர் கணபதி நகர் அலுவ லகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.வாசு தலைமை வகித் தார். சங்கத்தின் மாநிலச் செயலா ளரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை, மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜ், மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி ஆகியோர் பேசினர்.  கூட்டத்தில், தஞ்சையை அடுத்த, திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா கல்வி நிறுவனம் அரசுக்கு சொந்தமான திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்டிருந்த 31 ஏக்கர் நிலம், 24  ஏக்கர் புறம்போக்கு நிலம் என மொத்தம்  55 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து  கட்டிடங்களை கட்டியுள்ளது.  அந்த இடத்தை தமிழக அரசு பார பட்சமின்றி மீட்டு, குடிமனை இல்லாமல்  வசிக்கும் 2,000 மக்களுக்கு வழங்க லாம். ஆற்றங்கரைகளிலும், புறம்போக்கு  நிலங்களிலும் வசிக்கும் மக்களை புல்டோசர் கொண்டு அகற்றும் அரசு நிர்வாகம், பகிரங்கமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ள கார்ப்பரேட் கல்வி நிறுவனத்தின் ஆக்கிர மிப்பை அகற்றாமல் உள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.  எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ள அந்த இடத்தை மீட்டு ஏழை களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்.  இதனை வலியுறுத்தி, ஜூலை 12  (செவ்வாய்க்கிழமை) அன்று, தஞ்சை  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடி மனை கேட்டு மனு கொடுத்து ஆர்ப்பாட் டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.லாசர், மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர்  ஆர்.வாசு உள்ளிட்டோர் பங்கேற்க வுள்ளனர் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக, அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஜி.மணி முத லாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு  அஞ்சலி செலுத்தப்பட்டது.