தஞ்சாவூர், ஏப்.7- திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட அனைத்து கல்லூரி களிலும் தேர்வுக் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியதைக் கண்டித் தும், உயர்த்தப்பட்டுள்ள தேர்வுக் கட்ட ணம் உள்ளிட்ட இதர கட்டண உயர்வு களையும் திரும்பப் பெற வலி யுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், தஞ்சை சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, இந்திய மாண வர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் தொடர் வே.அர்ஜூன் தலைமை வகித்தார். கிளை நிர்வாகி பிரேம்குமார் முன்னிலை வகித்தார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஆறு பிரகாஷ் கோரிக்கை விளக்கவுரை யாற்றி போராட்டத்தை நிறைவு செய்தார். நிறைவாக தினேஷ் நன்றி கூறினார். “பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் வரும் ஏப்.13 அன்று இந்திய மாணவர் சங்கம் மாணவர்களைத் திரட்டி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் படும்” என மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.