districts

img

நிலுவையில் உள்ள பணப் பயன்களை உடனே வழங்குக! கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமையகத்தில் ஓய்வூதியர்கள் முற்றுகை போராட்டம்

கும்பகோணம்,  பிப்.25 - அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழி யர்கள் நலச் சங்கம் சார்பில்  ஓய்வு பெற்ற ஊழியர்க ளுக்கு 74 மாதமாக அக விலைப்படியை உயர்த்தா ததை கண்டித்தும், நிலுவை யில் உள்ள பணப் பயன்களை  உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தியும் கும்பகோணம் போக்கு வரத்துக் கழக தலைமை அலு வலகம் முன்பு ஓய்வு பெற்ற  போக்குவரத்து தொழிலா ளர்கள் முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் தலைமையிடமாக கும்ப கோணம் அரசு போக்குவரத்து கழக கோட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த கோட்டத் தில் திருச்சி, கரூர், தஞ்சா வூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை, காரைக்குடி, கும்ப கோணம் மண்டலங்களும் அடங்கும். இங்கு பணியாற்றி  ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 74 மாத மாக அகவிலைப்படியை உயர்த்தாததை கண்டித்தும், நிலுவையில் உள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும். 2020 மே முதல்  விருப்ப ஓய்வு பெற்ற ஓய்வூதி யர்களுக்கு ஓய்வூதிய நிலு வைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும்.

மாதம் முதல் தேதியிலே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய  பென்ஷன் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களின் 14  ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும். கடந்த  8 ஆண்டுகளாக பணப்பயன் கள் கிடைக்காத நிலையில் கடந்த ஆட்சியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. தற்போது அமைந்துள்ள திமுக ஆட்சி யில் தங்களுக்கு பணப் பயன் கள் கிடைக்கும் என்று எதிர் பார்த்திருந்தனர். ஆனால் 9  மாதமாகியும் எந்த ஒரு பணப் பயனும் கிடைக்காததால், ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆயி ரக்கணக்கான ஊழியர்கள் கோட்ட தலைமை அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு பெரிய இரும்பு தடுப்புகளை அமைத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் ஏராளமான காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கும்ப கோணம் அரசு போக்கு வரத்துக் கழக கோட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ள பிரதான சாலையில் நடந்த முற்றுகை  போராட்டத்தில் ஆயிரக்க ணக்கானோர் திரண்டதால் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிடப் பட்டன.