தஞ்சாவூர், அக்.31 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையில் உள்ள மக்கள் கவிஞர் கல்யா ணசுந்தரம் மணிமண்டபத்தை முறை யாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பாட்டெழுதுவதில் கொடி கட்டிப் பறந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் பிறந்தார். இவர் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி தன்னுடைய 29 ஆம் வயதில் காலமானார். பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாண சுந்தரத்தின் நினைவை போற்றும் வகை யில், கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம் பர் 15 ஆம் நாள், பட்டுக்கோட்டை முத்துப் பேட்டை சாலையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி.மணி தலைமையில், முன்னாள் முத லமைச்சர் மு.கருணாநிதி அதனை திறந்து வைத்தார். இதில் துரைமுருகன், முல்லை வேந்தன் உள்ளிட்ட அப்போதைய அமைச்சர்களும், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.திரு நாவுக்கரசர், அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மணிமண்டபம் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப் பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட் டோர், தினசரி மணிமண்டபத்தில் வந்து அமர்ந்து, அமைதியான சூழலில் தேர்வுக்கு படிக்கின்றனர். இந்த மணிமண்டபத்தில் பட்டுக் கோட்டையாரின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரு டைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. 23 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப் பட்ட இந்த மணிமண்டபம், தற்போது உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அங்குள்ள தோட்டம் தூய்மைப் படுத்தப்படாமல், செடி, கொடிகள் மண்டி புதர்போல் காட்சியளிக்கிறது. மேலும், சிறுவர்கள் விளையாட அமைக் கப்பட்ட சறுக்கு மரம், ஊஞ்சல், ராட்டி னம் ஆகியவை பழுதடைந்து காணப் படுகின்றன. மேலும், இங்குள்ள கழிப் பறை முறையாக சுத்தப்படுத்தப்படாத தால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு சிறுவர் பூங்காவை சீரமைக்கவும், கழிப்பறையை தினசரி சுத்தம் செய்ய வும், பார்வையாளர்கள் பயனடையும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரவும், மணிமண்ட பத்தை முறையாக பராமரிக்க வேண் டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.