districts

பாபநாசம்: கிராமப்புற பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பாபநாசம், மார்ச் 16- பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலை வருமான  ஜவாஹிருல்லா  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யா மொழியை சந்தித்து பல்வேறு கோரிக்கை கள் அடங்கிய  மனுவை வழங்கினார். மனு வில் கூறப் பட்டிருப்பதாவது:-  பாபநாசத்தில் தனிக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த பாபநாசம் வட்டார கல்வி  அலுவலகம் பழுதடைந்ததால் இடிக்கப் பட்டது. தற்போது பாபநாசம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள ஒரு கட்டடத்தில் இயங்கி வருகிறது. வட்டாரக் கல்வி அலுவலகம், பள்ளிக் கட்டடத்தில் இயங்குவதால், அங்கு படிக்கும் மாண வர்களுக்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது. எனவே, ஏற்கனவே இடிக்கப்பட்ட பழைய இடத்திலேயே பாபநாசம் வட்டாரக் கல்வி அலுவலகம் கட்டித் தர வேண்டும்.  பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாபநாசம் ஒன்றி யம்  உம்பளாப்பாடி ஊராட்சி, இளங்கார்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி, பாபநாசம் பேரூராட்சி வார்டு  எண் 3-இல் உள்ள பாபநாசம் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளி,  கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் சுந்தரபெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி-கிழக்கு ஆகிய பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தரப் பட வேண்டும்,  பாபநாசம் பேரூராட்சியில் பொது நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. தற்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் இயங்கி வருகிறது. பொது மக்கள் சென்று வருவதற்கு ஏற்றவாறு அந்தப் பகுதி இல்லாததால், புதிய  இடதைத் தேர்வு  செய்து நவீன வசதிகளுடன் நூலகத்துக்கு தனி கட்டடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும்.  பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் இராஜகிரி ஊராட்சியில் உள்ள நூலகத்திற்கு சொந்த கட்டடமும், கணினி வசதிகள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டடம் கட்டித் தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளது.