புதுக்கோட்டை, டிச.6- கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை முயற்சியால் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலைய சீரமைப்புப் பணி செவ்வாயன்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை பேருந்து நிலையம் பல ஆண்டு களாக மேடு பள்ளங்களாகவும், சுகாதார மற்ற முறையிலும் இருந்தது. பேருந்து நிலை யத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்ட தொடர் முயற்சியினால் பேருந்து நிலையம் முழுவதும் சிமெண்ட் தளம் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்படி அரசு பொது நிதியிலிருந்து ரூ.34 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளத்தை மூடும்பணி கால்ஸ் நிறுவனத்தின் உதவியோடு செவ்வாயன்று தொடங்கியது. நிகழ்வில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின் நாராயணசாமி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.