தஞ்சாவூர், மே 13 - சேதுபாவாசத்திரத்தில் புதிய மீன்பிடி இறங்குதளம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. இது பழுதடைந்த நிலையில் இருந்ததால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய மீன்பிடி இறங்குதளம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தேர்தல் பிரச்சாரத் தின் போது, தான் வெற்றி பெற்றால், சேதுபாவாசத்திரம் பகுதிக்கு புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைத்து தருவ தாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்நி லையில், சட்டமன்றத்தில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக் குமார் இதுகுறித்து கோரிக்கை எழுப்பி யிருந்தார். இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலோடு, மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், “சேதுபாவாசத்திரத்தில் மீன்பிடி இறங்குதளம் ரூ.9 கோடியில் புதிதாக அமைத்து தரப்படும்” என அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலை யில், வெள்ளிக்கிழமை சேதுபாவா சத்திரத்தில் புதிய மீன்பிடி இறங்கு தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பேராவூரணி சட்டமன்ற உறுப்பி னர் என்.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. சேதுபாவாசத்திரத்தில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில், 110 மீட்டர் நீளத்தில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணியும், பழைய மீன்பிடி இறங்குதளத்தைப் புதுப்பிக்கும் பணியும் நடைபெற உள்ளது. இப்பகுதியில், 55 விசைப்படகுகள், 850 நாட்டுப்படகுகள் உள்ளன. புதிய துறை முகம் அமைப்பதற்கு இப்பகுதி மீன வர்கள் தமிழக அரசுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ள னர்.