தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் கணபதி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் செவ்வாயன்று மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் என்.வி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு விளக்கிப் பேசினார். இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் குறித்து, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தெரிவித்துள்ள தாவது: ‘‘கல்மேடு தேர் விபத்தில் இறந்த 11 பேர் குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரணத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின்கம்பியால் விபத்து ஏற்பட்டதால், தமிழக மின்சார வாரிய நிர்வாகம், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தனியே நிவாரணம் வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேசன் கடைகளில், பழுப்பு நிறமான தரமற்ற அரிசி வழங்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு ரேசன் கடைகளில் தரமான அரிசியை வழங்க வேண்டும். நூறுநாள் வேலையை, 150 நாட்களாக உயர்த்தியதை தமிழக அரசு அமுலுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஜாப் கார்டு உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். பட்டு உற்பத்தித் தொழிலுக்கு தேவை யான, அடிப்படை மூலப் பொருளான கோரா விலை, கிலோ ரூ.3 ஆயிரத்து 500 லிருந்து, 7 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள் ளது. இதனால் பட்டு நெசவுத் தொழிலா ளர்கள், சிறு உற்பத்தியாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பட்டுச்சேலை உற்பத்தி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய அரசு கோரா விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தேவையான அளவு கோரா இறக்குமதி செய்து பட்டு நெசவுத் தொழிலை காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது’’ என்றார்.