தஞ்சாவூர், ஜூலை 15 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக் கும் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் தலைமை வகித்தார். சேது பாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பரிமளம் வரவேற்றார். உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு என்.அசோக்குமார் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிப் பேசினார். தஞ்சாவூர் பாரத் கல்விக் குழும நிறுவனர் புனிதா கணேசன், பேரா. சண்முகப்பிரியா, தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், மெய்ச்சுடர் வெங்கடே சன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.